குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மஜகவினர் மனு…!

வேலூர்.ஜூலை.18., குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அமலுவிஜயன் MLA., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனிஸ் அவர்கள் சந்தித்து மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து மனு அளித்தார்.

குடியாத்தம் நகரின் 8-வது வார்டு அசேன் தெரு, சக்தி நகர், MBS நகர், பகுதிகளில் மக்களின் முக்கிய கோரிக்கையாக விடுப்பட்ட சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய்கள் சீரமைப்பு புதிய மின் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு அவரிடம் அளிக்கப்பட்டது.

இதை பெற்றுக்கொண்டவர் அனைத்து கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் V.முபாரக் அஹ்மத், மஜக நகர துணை செயலாளர் A.S.கவுஸ் பாஷா, நகர மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் சாதிக் பாஷா, ரஹ்மான், மற்றும் கபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
18.07.2021