விருது நகரில் மஜக சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம்!


ஜூலை:18., மனிதநேய ஜனநாயக கட்சி விருது நகர் மாவட்டம் திருத்தங்கல் நகரம், சங்கரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நகர செயலாளர் நாகூர் கனி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் கண்மணி காதர், தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேச ராஜா, நகர துணை செயலாளர் கருப்பையா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை ABJ டைனமிக் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர் சலீம், டாக்டர் லட்சுமி பிரபா, ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் நகர பொருளாளர் முஹம்மது அசன், நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#விருது_நகர்_மாவட்டம்
18.07.2021