தாய்வீடு திரும்பல்! வடசென்னை மேற்கு மாவட்டத்தில் மஜகவில் இணைந்த மனிதநேய சொந்தங்கள்..

ஏப்ரல்.05.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்த்து பல்வேறு தரப்பினர் மஜக-வில் இணைந்து வருகின்றனர்.

தலைமை நிர்வாகக் குழு வழிகாட்டலில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் I.N.D.I.A. கூட்டணிக்கு ஆதரவாக எடுத்த தேர்தல் நிலையாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் மஜக-வின் பக்கம் ஈர்த்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வடசென்னை மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஓட்டேரி. ரஜாக் அவர்கள் தலைமையில் திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த அம்துல் சமது,C.N.கரீம் மற்றும் M.நசீர் ஆகியோர் மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

இதில் செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் அவர்கள் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_மேற்கு
05.04.2024.