நாகர்கோவில்… இந்தியாவுக்கு வசந்த காலம் தொடங்கி விட்டது! வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை ஆதரித்து மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஏப்ரல்.05.,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அவர்களை வெற்றி பெற செய்யும் வகையில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.

காலையில் குளச்சல் பகுதி பரப்புரைக்கு வர தாமதமான நிலையில், இன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது…

சித்தாந்தங்களுக்கு இடையேயான போராட்டத்தில் நாம் இத்தேர்தலை அணுகுகிறோம்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விட இத்தேர்தல் களம் வித்தியாசமானது. முக்கியமானது.

மணிப்பூரில் தேர்தல் ஆதாயத்திற்காக சொந்த மக்களை இன ரீதியாக மோத விட்டு, இவர்களே ஆயுதங்களை வழங்கினார்கள்.

சொந்த நாட்டு மக்கள் மோதிக் கொண்டு உயிரிழந்தார்கள்.

எத்தனையோ வெளிநாடுகளுக்கு போன பிரதமர் மோடி, கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு கடைசி வரை போகவில்லை.

இதுதான் இவர்களது அரசியல்.

எதிர்வரும் ஏப்ரல் 19 என்பது வாக்களிக்கும் நாள் மட்டுமல்ல…. காந்தி தேசத்தை மீட்டெடுக்கும் நாளாகும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் NEET தேர்வை விரும்பிய மாநிலங்கள் மட்டுமே ஏற்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாளாக்குவோம் என்றும், தினமும் 400 ரூபாய் சம்பளம் என்றும் கூறியுள்ளனர்.

வறுமை கோட்டில் உள்ள பெண்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் என்றும் கூறியுள்ளனர்.

சுங்கச்சாவடிகள் (Tollgate) அகற்றப்படும் என்றும் கூறியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மக்களின் பிரச்சனைகளை வேர் வரை சென்று கண்டறிந்து அதற்கு இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கைகள் மூலம் தீர்வை சொல்லியிருக்கிறது.

பாஜகவுக்கு வலிமையான ஒரே மாற்று இந்தியா கூட்டணி தான்.

இந்தியாவுக்கு வசந்தகாலம் மீண்டும் வருகிறது. புது நம்பிக்கை பிறந்திருக்கிறது.

வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்க களத்துக்கு செல்லுங்கள்

தினமும் ஒரு வாக்காளரை இரு முறை சந்தியுங்கள்.

இப்போது எங்களை சந்திக்க வராதீர்கள். மக்களை சந்தியுங்கள்.

இவ்வாறு அவர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையே பேசி முடித்தார்.

இந்நிகழ்வில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மஜக பொறுப்பாளரும், இளைஞரணி மாநில துணைச் செயலாளரும் ஆன நெல்லை பிலால் அவர்களும், குமரி மாவட்ட மஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இதில் திமுக மாவட்டச் செயலாளரும், மேயருமான மகேஷ், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத் ( ஆந்திரா) நெல்லை முன்னாள் காங்கிரஸ் MP. ராம சுப்பு, வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உரையாற்றினர்.

பிறகு அப்பகுதி கவுன்சிலர் ரிஸ்வானா ஹிதாயத் அவர்களின் வீட்டில் தேனீர் விருந்து நடைபெற்றது.

அப்போது மாலிக் தினார், தைக்கால் பள்ளி நிர் வாசிகளும், கோட்டாறு பகுதி பிரமுகர்களும் தலைவர் அவர்களை சந்தித்து உரையாடினர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
05.04.2024.