வேலூர்.அக்.27., இன்று வேலூர் மாநகரம் 31வது வார்டு சார்பனாமேடு தண்ணீர் டேங்க் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் காலை 8 மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், சையத் உசேன் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் MBA கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். இதில் மஜக முன்னால் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சையத் அலி, மாநகர மனித உரிமை அணி துணை செயலாளர் ஷயின்ஷா, 2-வது மண்டல செயலாளர் சையத் கலீம், 31வது கிளை பொருளாளர் முஜாயத், 31வது மேற்கு கிளை இளைஞரணி செயலாளர் அப்பாஸ் மற்றும் ஹயாத், ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சுமார் 350க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 27.10.2017
தமிழகம்
தமிழகம்
கோவை மாவட்டத்தில் மஜகவின் சார்பில் மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
கோவை.அக்.26., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்டம் மத்தியபகுதி N.H.ரோடு கிளையின் சார்பில் ப்ரசன்டேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. மஜகவின் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, மருத்துவ அணி மாவட்ட துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், மாவட்ட இளைஞரணி செயலாளர் PMA.பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், துணைசெயலாளர் லீட்ஸ்பஷீர் மற்றும் நிர்வாகிகள் வீடியோரபி, ரபீக் ஆகியோர் கலந்துகொண்டனர். இம்முகாமில் பள்ளி மாணவிகள் சுமார் 2500பேருக்கும் மேலும் அவ்வழியே சென்ற அனைத்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 26/10/2017
நெய்வேலியில் மாணவர் இந்தியா சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
கடலூர்.அக்.26., கடலூர் வடக்கு மாவட்டம் நெய்வேலி நகரத்திற்க்கு உட்பட்ட இருப்புகுறிச்சியில் உள்ள Sacret Heart higher secondary பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நேற்று 25.10.17 நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் துவக்கி வைத்தார். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், நகர செயலாளர் OAK.நூர் முகமது மற்றும் நகர இளைஞர் அணி செயலாளர் S.அசார் ஆகியோர் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். தகவல்; #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு. #கடலூர்_வடக்கு
பேராவூரணியில் மஜகவின் புதிய கிளை (நகர நிர்வாகம்) உதயம்…
தஞ்சை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பேராவூரணியில் இன்று புதிதாக நகர நிர்வாகம் அமைக்கப்பட்டது. மஜக மாநில துணை பொது செயலாலர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா தலைமையிலும், பேராவூரணி சலாம் முன்னிலையிலும் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கீழ்கண்டவர்கள் பேராவூரணி நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். நகர செயலாலர் : ச.அப்துல் மைதீன் , நகர பொருளாளர் : கா.அப்துல் பாட்ஷா, நகர துணை செயலாளர்கள் : தா.நைனா முகம்மது, சிவ சண்முகம், இளைஞர் அணி நகர செயலாலர் தா.அப்துல் அஜிஸ், இளைஞர் அணி நகர துணை செயலாலர் : மஹாதிர் ஆகியோர் மஜக நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்
மஜக சார்பில் திருப்பனந்தாள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
குடந்தை.அக்.25., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் சார்பில் இன்று 25.10.2017 புதன் காலை 9 மணி முதல் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இருவேறு இடங்களில் நடைபெற்றது. இதில் மஜக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது மஹரூப், மாவட்ட துணை செயலாளர்கள் குடந்தை நிஜாம், பரக்கத்துல்லா, குவைத் மண்டலம் சாதிக் பாட்ஷா, திருப்பனந்தாள் ஒன்றியம் உஸ்மான் அலி, முபாரக் அலி, நிஜாம், துபாய் மண்டல முன்னால் பொருளாலர் பசூர் பாபு, சோழபுரம் சாஜித், இராஜகிரி இப்றாஹிம், செறுகடம்பூர் அன்சாரி, சிக்கல்நாயன்பேட்டை ரியாஸ், ஹனஸ் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இரண்டு இடங்களில் நடைபெற்ற இம்முகாமில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழிப்புணர்வுடன் வந்து நிலவேம்பு கசாயம் வாங்கி பருகி பயநடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_வடக்கு_மாவட்டம்