(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை...) ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சீனியின் விலையை ரூ.13.50 யிலிருந்து ரூ.25 ருபாயாக விலை உயர்த்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏழை,எளிய மக்களும் சாமானிய மக்களும் மிகவும் நம்பி இருக்கும் ரேஷன் கடையில் இப்படி இரண்டு மடங்காக விலையை உயர்த்திருப்பது இதற்கு முன்பு நடைபெறாத ஒர் நிகழ்வாகும். 1ரூபாய் அல்லது 2ரூபாய் உயர்த்தினால் மக்கள் சகித்து கொள்வார்கள். இப்படி இரண்டு மடங்கு ஏற்றினால் எப்படி பொறுத்துக்கொள்வார்கள்? சாமானிய மக்களின் அன்றாட உணவு தேவைகளின் ஒன்றுதான் சீனி. இதில் ஏழைகளுக்கு ஒரு விலை,மற்றவர்களுக்கு ஒரு விலை என மாண்புமிகு அமைச்சர் திரு.காமாராஜ் அவர்கள் விளக்கம் அளித்திருப்பது ஏற்க கூடியதாக இல்லை. எனவே ரேஷன் கடைகளில் சீனியின் மீதான விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவண், #M_தமிமுன் _அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி. 28.10.2017
தமிழகம்
தமிழகம்
திருமருகல் ஒன்றியத்தில் நாகை MLA சுற்றுப்பயணம்!
நாகை.அக்.28., நாகப்பட்டினம் தொகுதி உப்பட்ட திருமுருகல் ஒன்றியத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நேற்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அம்பல் ஊராட்சியில் நடைபெற்ற அரசு இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில் 4 வது தொகுதி நிதியிலிருந்து புதிதாக கட்டப்படவிருக்கும் கட்டிடம் குறித்தும், பழைய கட்டிடத்தை இடிப்பது குறித்தும் தகவல் பரிமாறிவிட்டு, திருமருகல் வந்தார். அங்கு கடைத்தெருவில் சந்தித்த பொதுமக்களிடம் உரையாடினார். அவ்வூருக்கு மின் மயானம் ஒற்றை கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கலெக்டரிடம் பேசி ஏற்பாடு செய்வதாகவும் வாக்களித்தார். பிறகு பனங்காட்டூருக்கு சென்று அங்கு ஜும்மா தொழுதுவிட்டு, அவ்வூர் மக்களிடம் குறை கேட்டார். தனது தொகுதி நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கு போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறு மூலம் அடுத்த வாரம் முதல் அவ்வூருக்கு தண்ணீர் கிடைக்கும் என்றும் கூறினார். அவ்வூர் மக்கள் தங்கள் ஊருக்கு ட்ரான்ஸ்பார்மர் ஒன்று அமைத்து தர வேண்டும் என்றும், பேருந்து வசதி செய்து தரப்பட வேண்டும் என்றும் கோரினார். உடனே மின்துறை J.E. அவர்களை தொடர்புகொண்ட MLA.உடனே ட்ரான்ஸ்பார்மர் ஒன்றை இப்பகுதிக்கு விரைந்து வழங்க கேட்டுக்கொண்டார். பிறகு பேருந்து போக்குவரத்து குறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம்
தமுமுக முன்னால் மாவட்ட செயலாளர் மஜகவில் இணைந்தார்.. !
திருவள்ளுர்.அக்.28.,தமுமுக திருவள்ளுர் மேற்கு மாவட்டம் முன்னால் மாவட்ட செயலாளர் மதுரவாயல் சுலைமான் அவர்கள் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது.M.Com அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்வின் போது மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திருவள்ளுர்_மேற்கு_மாவட்டம் #28_10_17
வாட்ஸ்அப்பில் வந்த தகவலை தொடர்ந்து களத்தில் இறங்கியது மஜக..!
வேலூர்.அக்.28., வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் உள்ள உடையேந்திரம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் ஹைதர் அலி மசூதிக்கு செல்லும் வழியில் சில சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது என்று இரண்டு நாட்களாக வாட்ஸ் ஆப்பில் ஒரு காணொளி காட்சி வந்தது. அந்த காணொளியை கண்டதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் ஜே.எம். வசீம் அக்ரம் தலைமையில், மஜக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் P.M.ஷபீவுல்லாஹ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் V.அப்துல்லாஹ், S.M. ஜீலான் ஆகியோர் ஹைதர் அலி பள்ளிவாசலுக்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்தவுடன் மஜகவின் மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம் அவர்கள், தமிழக தொழிலாளர் மற்றும் வக்பு வாரிய அமைச்சர் டாக்டர்.நிலோபர் கபீல் அவர்களை தொடர்பு கொண்டு மேற்கண்ட பிரச்சனை பற்றியும், எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றியும் எடுத்துக் கூறினார். அதை அடுத்து சம்பந்தபட்ட பள்ளிவாசல் பாதையை சீரமைக்க அதிகாரிகளிடமும், சமூகவிரோத செயல்களை ஒடுக்க காவல் துறையினரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாட்களில் மேற்கண்ட இடத்தை சீர்செய்வதாக உறுதி அளித்தனர். இந்நிகழ்வில் மஸ்ஜித் நிர்வாகி அஹ்மத் பாஷா, பேரூராட்சி முன்னாள்
பேராவூரணியில் மஜகவின் எழுச்சி..! 40 இளைஞர்கள் மஜகவில் இணைந்தனர் !
பட்டுக்கோட்டை.அக்.27., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணியில் நேற்றைய முந்தையதினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் கிளை துவங்கப்பட்டது. கிளை துவங்கி இரண்டே நாளில் ஒருங்கிணைப்பாளர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் அவர்கள் முன்னிலையில் 40 இளைஞர்கள் தங்களை இன்று (27-10-2017) அரசியல் சேவையாற்றும் மஜகவில் இணைத்துக்கொண்டனர். ரவிச்சந்திரன் நீலகண்டபுரம், பேராவூரணி ஏசு ராஜா கலைஞர் நகர் நீலகண்டன் நாட்டாணிக்கோட்டை ராஜேஸ் நாட்டாணிக்கோட்டை நத்தர்ஷா நாட்டாணிக்கோட்டை விக்னேஷ் பேராவூரணி டவுண் சுந்தர மூர்த்தி செங்கொல்லை முகம்மது ஆசிக் நாட்டாணிக்கோட்டை பழனிக்குமார் உடையநாடு ஐய்யனார் நாட்டாணிக்கோட்டை பிரவின் குமார் காலகம் இம்ரான் நசீர் நாட்டாணிக்கோட்டை அப்சர் கான் பேராவூரணி டவுண் ஆஜித் கலைஞர் நகர் அருண் குமார் கலைஞர் நகர் ஆதி சங்கர் நீலகண்டபுரம் அகிலன் பேராவூரணி டவுண் அபுபக்கர் சித்திக் பேராவூரணி டவுண் ஜாகிர் உசேன் பொன்காடு கார்த்திக் பொன்காடு ஆனஸ்ட்ராஜ் பொன்காடு மோகன் ராஜ் பொன்காடு தினேஷ்குமார் பொன்காடு முருகானந்தம் பொன்காடு நீலு செல்வம் பொன்காடு விஜய் செல்விநாயகபுரம் ஜெகன் நாட்டாணிக்கோட்டை விக்னேஷ் தெண்ணங்குடி நவீண் நாடகாடு அகிலன் நாடகாடு ராஜேஷ்கண்ணன் முனுமக்காடு பிரதீப் பொன்காடு கே.ஜெகன் பொன்காடு கமலேஷ் பொன்காடு மூர்த்தி பொன்காடு அருண்குமார் பொன்காடு டி.நீலகண்டன் பொன்காடு ஆர்.நீலகண்டன் பொன்காடு தகவல் : #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்