நாகை.அக்.29., நாகப்பட்டினம் நகரில் தொடர்ந்து தூய்மை விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. காலை 6 மணியிலிருந்து M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் கொட்டும் மழையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடன் நகராட்சி ஆணையர் ஜான்ஸன் உள்ளிட்ட அதிகாரிகளும், நகராட்சி ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் உடன் சென்றனர். பேருந்து நிலைய கடைகளுக்கு சென்று துப்புரவு பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார். பிறகு, அங்குள்ள கழிப்பறைகளில் ஆய்வு செய்து, அதை தூய்மையாக பராமரிக்குமாறு நகராட்சியை வலியுறுத்தினார். மேலும் பழைய கழிவறை கட்டிடத்தை இடித்துவிடுமாறும், புதிதாக குளியல் அறைகளுடன் கூடிய நவீன கட்டண கழிப்பறையை கட்டுமாறும், மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் சிறுநீர் கழிப்பதை தடுக்குமாறும் சுகாதாரமாக இப்பகுதியை பராமரிக்க திட்டங்களை வகுத்து தருமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பிறகு நகராட்சி குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு சோதனை கருவி மூலம் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தார். அப்பகுதிக்கு வருகை தந்த கலெக்டரிடம் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்தும் விவாதித்தார். பிறகு யாஹூசைன் பள்ளி தெருவுக்கு வருகை தந்து அங்கு நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடையை சீரமைத்து தருவது குறித்து அதிகாரிகளின் கருத்துகளை கேட்டு
தமிழகம்
தமிழகம்
ஆத்தூர் மஜக சார்பில் இரண்டாம் கட்ட நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்…!
தூத்துக்குடி.அக்.29., தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஆத்தூர் நகர மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் பள்ளிவாசல் அருகே நகர செயலாளர் அன்வர் பாஷா தலைமையில் நடைப்பெற்றது. இதில் நகர மருத்துவ சேவை அனி செயலாளர் அரபாத், நகர பொருளாலர் இபுராகிம், துணைச் செயலாளர்கள் காஜா, அல்தாப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள் மற்றும் மஜகவின் செயல்விரர்கள் கலந்து கொண்டனர். இதில் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் நிலவேம்பு குடிநீர் அருந்தி பயணடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK_IT_WING தூத்துக்குடி தெற்கு மாவட்டம் 29.10.2017
மஜக சார்பில் வேலூர் மாநகரம் R.N.பாளையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!
வேலூர்.அக்.29., இன்று வேலூர் மாநகரம் 53-வது வார்டு R.N.பாளையம் பஜார் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் காலை 8மணியளவில் நடைப்பெற்றது. இம்முகாம் கிளை செயலாளர் ஜியாவுதீன் கலீம் மற்றும் துணை செயலாளர் சித்திக் பாஷா முன்னிலையில், மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மஜக முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், மாநகர துணை செயலாளர் சையத் இம்தியாஸ், கிளை துணை செயலாளர் சாதிக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம் 29.10.2017
அதிரையில் IKP குவைத் மண்டல பொறுப்பாளர் பைசல் திருமணம்..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
அதிரை.அக்.29., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹ்மது அவர்கள் திருமணம் (நிக்காஹ்) இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_M.com , துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாநில துணை செயலாளர் வானவில் காதர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், மாவட்ட துணை செயலாளர் மைதீன், அதிரை நகர செயலாளர் செல்ல ராஜா, பொருளாளர் சாகுல் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம்
நாகை நகராட்சியில் இலவச குப்பை தொட்டிகள் ! நாகூரில் தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார் !
நாகை. அக்.28., இன்று நாகை தொகுதியில், நாகை நகராட்சி சார்பில் M.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் குப்பைகள் மற்றும் கழிவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டது. நாகூர் சிவன் கோவில் அருகே, சிவன் கோவில் குருக்கள் சிவராமன் அவர்கள் முதல் குப்பைத் தொட்டியை பெற்றுக் கொண்டார். அவருடன் கோவில் நிர்வாகிகள் ராஜா மற்றும் முருகானந்தம் ஆகியோரும் உடனிருந்தனர். வீடுகள் தோறும் இலவச குப்பைத் தொட்டிகள் வழங்கி, விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. நகராட்சி சார்பில் வாகணங்கள் வரும்போது, இத்தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்ட குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் குஞ்ஜாலி மரைக்காயர் தெரு, கடைத்தெரு, யானைக் கட்டி சந்து , புதுமனைத் தெரு, நாகூர் பிரதான சாலை ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் ஷேக் தாவூது மரைக்காயர், நகராட்சி ஆனையர் ஜான்சன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். வழியெங்கும் பொதுமக்கள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் குறித்துக் கொள்ளப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு MLA அவர்கள் உத்தரவிட்டார்கள். ஆங்காங்கே சாக்கடை தேக்கங்களை சரி செய்யுமாறும், குப்பைகள் தேங்கும் இடங்களில் உடனே அதனை அகற்றுமாறும், நகராட்சி கழிப்பிடங்களை சுகாதாரமாக பராமரிக்மாறும்