மஜக சார்பில் வேலூர் மாநகரம் R.N.பாளையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்..!

image

image

image

image

வேலூர்.அக்.29., இன்று வேலூர் மாநகரம் 53-வது வார்டு R.N.பாளையம் பஜார் தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபிக் ரப்பானி தலைமையில் காலை 8மணியளவில் நடைப்பெற்றது.

இம்முகாம் கிளை செயலாளர் ஜியாவுதீன் கலீம் மற்றும் துணை செயலாளர் சித்திக் பாஷா முன்னிலையில், மாவட்ட அமைப்புக்குழு பொறுப்பாளர் முஹம்மத் ஜாபர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் மஜக முன்னால் மாநகர செயலாளர் தாஜுதீன் அஸ்கர், மாநகர துணை செயலாளர் சையத் இம்தியாஸ், கிளை துணை செயலாளர் சாதிக் பாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பொதுமக்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_கிழக்கு_மாவட்டம்
29.10.2017