துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி கே சேகர்பாபுவை ஆதரித்து மாபெரும் வாகனப் பேரணி..! மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது..!!


சென்னை.ஏப்ரல்.03.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் துறைமுகம் தொகுதி வேட்பாளர் பி.கே.சேகர் பாபு அவர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் துறைமுகம் பகுதி சார்பில் பல்வேறு கட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நேற்று (02.04.2021) மாலை 4 மணியளவில் பாரதி கலை கல்லூரி அருகில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் தலைமையில் துறைமுகம் பகுதி சார்பில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இளைஞர்கள் ஊர்வலமாகவும், நடந்து சென்றும் வாக்குகளை சேகரித்தனர்.

துறைமுகம் தொகுதிக்குப்பட்ட செவன் வெல்ஸ், சௌகார்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் உள்ள பல தெருக்களில் பிரச்சாரங்கள் மேற்கொண்டார்.

இதில் மாநிலத் துணைச் செயலாளர் பொறியாளர் முஹம்மது சைபுல்லாஹ், மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், மாவட்ட பொருளாளர் அமீர் அப்பாஸ், ரவுப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் புதுப்பேட்டை யூசுப், மாவட்ட நிர்வாகிகளான அன்வர், கையூம், அக்பர், ரசாக், சாகுல் ஹமீத், பக்கீர் மைதீன், துறைமுக பகுதி நிர்வாகிகளான அபூபக்கர், மண்ணடி தாஹா, அசன் அலி, பஜார் இஸ்மாயில், குப்பை சீனி, அஸ்கர், அம்ஜத் ஷேக் மொய்தீன், மண்ணடி சிக்கந்தர், ராயபுரம் தமிம், நைனார், பகுதி துணை வட்ட கிளை நிர்வாகிகள் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#மத்திய_சென்னை_கிழக்கு