அதிரையில் IKP குவைத் மண்டல பொறுப்பாளர் பைசல் திருமணம்..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!

image

image

image

அதிரை.அக்.29., இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணை செயலாளர் பைசல் அஹ்மது அவர்கள் திருமணம் (நிக்காஹ்) இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது_M.com , துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ், மாநில துணை செயலாளர் வானவில் காதர், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அஹமது கபீர், மாவட்ட துணை செயலாளர் மைதீன், அதிரை நகர செயலாளர் செல்ல ராஜா, பொருளாளர் சாகுல் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்