நாகை.அக்.29., நாகப்பட்டினம் நகரில் தொடர்ந்து தூய்மை விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. காலை 6 மணியிலிருந்து M.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் கொட்டும் மழையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
அவருடன் நகராட்சி ஆணையர் ஜான்ஸன் உள்ளிட்ட அதிகாரிகளும், நகராட்சி ஊழியர்களும், சமூக ஆர்வலர்களும் உடன் சென்றனர்.
பேருந்து நிலைய கடைகளுக்கு சென்று துப்புரவு பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.
பிறகு, அங்குள்ள கழிப்பறைகளில் ஆய்வு செய்து, அதை தூய்மையாக பராமரிக்குமாறு நகராட்சியை வலியுறுத்தினார்.
மேலும் பழைய கழிவறை கட்டிடத்தை இடித்துவிடுமாறும், புதிதாக குளியல் அறைகளுடன் கூடிய நவீன கட்டண கழிப்பறையை கட்டுமாறும், மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகள் சிறுநீர் கழிப்பதை தடுக்குமாறும் சுகாதாரமாக இப்பகுதியை பராமரிக்க திட்டங்களை வகுத்து தருமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
பிறகு நகராட்சி குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு சோதனை கருவி மூலம் குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்தார்.
அப்பகுதிக்கு வருகை தந்த கலெக்டரிடம் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்தும் விவாதித்தார்.
பிறகு யாஹூசைன் பள்ளி தெருவுக்கு வருகை தந்து அங்கு நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடையை சீரமைத்து தருவது குறித்து அதிகாரிகளின் கருத்துகளை கேட்டு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
பிறகு ஆரிய நாட்டு பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதியில் சாக்கடை அடைப்புகளை சீர் செய்ய உத்தரவிட்டதோடு, அப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை முற்றிலுமாக ஒரு வாரத்திற்குள் அகற்றுமாறு நகராட்சியை கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நம்பியார் நகர் பகுதிக்கு சென்று அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு புதிதாக நடைபெறும் மீன் வர்த்தகத்தையும் பார்வையிட்டார்.
அப்பகுதியில் ஜனவரிக்குள் ஹைமாஸ் விளக்குகள் அமைத்து தரப்படும் என்றும் கூறினார். அப்பகுதியில் சாலை வசதிகள் அமைத்து தர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதையும் கூறினார்.
பிறகு நகராட்சி அதிகாரிகளிடம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றுமாறும், பிளிச்சிங் பவுடர்களை தேவைப்படும் இடங்களில் தெளிக்குமாறும், கொசு மருந்துகளை மக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப புகைக்குமாறும் அறிவுறுத்தினார்.
கொட்டும் மழையில் மழைக்கால முன் நடவடிக்கைகள் குறித்து MLA அவர்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.
வழியெங்கும் நகராட்சியின் பிரச்சார வாகனம் ஒன்று டெங்கு குறித்தும், குப்பைகளை அகற்றுவது குறித்தும் பிராச்சாரம் மேற்கொண்ட படியே வந்த வண்ணம் இருந்தது.
நிறைவாக இப்பணிகளில் பங்கேற்ற கமிஷ்னர், நகராட்சி பொறியாளர்கள், நகராட்சி ஊழியர்கள், குப்பை அள்ளும் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் MLA அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக், தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, நகர செயலாளர் சாகுல் ஹமீத், பொருளாலர் அஜிஸ் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
29.10.17