சென்னை. ஜன.08., இன்று தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரையாற்ற தொடங்கியபோது, எதிர்கட்சிகள் எழுந்து வெளிநடப்பு செய்தனர். மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளிநடப்பு செய்து பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது... மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக, மரபுகளை மீறி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வரும் கவர்னரின் உரையை புறக்கணித்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாக்குமரி மாவட்டத்தை "தேசிய பேரிடர் பாதிப்பு" மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். அதுபோல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் 159 படகுகளையும், மீனவர்களையும் இலங்கை அரசு சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. அதை மத்திய அரசு மீட்டுத் தரவேண்டும் என கோரிக்கை வைத்தோம். இவ்விரண்டு கோரிக்கைகளையும் மத்திய அரசு புறக்கணித்து வரும் நிலையில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் தமிழக கவர்னரின் உரையை மூன்று காரணங்களின் அடிப்படையில் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்! இவ்வாறு அவர் பேட்டியளித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING. #சென்னை. 08.01.18
தமிழகம்
தமிழகம்
திருச்சியில் மஜக நிர்வாக குழு மற்றும் சிறப்பு நிர்வாககுழு கூட்டம்..!
திருச்சி.ஜன.08., திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பெமினா ஹோட்டலில் நேற்று (07.01.2018) காலை மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாககுழு கூட்டமும், மதியம் முதல் இரவு வரையில் சிறப்பு நிர்வாககுழு கூட்டமும் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர்கள் JS.ரிஃபாயி ரஷாதி, AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர்கள் கோவை சுல்தான் அமீர், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், சீனி முகம்மது, மாநில துணைச் செயலாளர்கள் கோவை பசீர், Er.சைபுல்லாஹ், புளியங்குடி செய்யது அலி, பல்லாவரம் சபி, ஈரோடு பாபு ஷாஹின்ஷா, புதுமடம் அனீஸ், திருமங்கலம் சமீம் ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மேலும் அணி நிர்வாகிகளான விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆரோக்கியமான பல கருத்துக்களை கொண்டு கட்சியின் வளர்ச்சினை பற்றி நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம் 07.01.18
ஜனவரி எழுச்சி தொடங்கியது…!
சேலம்.ஜன.07., சேலத்தில் 50கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் நேற்று இணைத்து கொண்டார்கள். சேலத்தில் மமக மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் முன்னிலையில் இணைந்து கொண்டார்கள். இந்நிகழ்சியில் இந்து மற்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு இணைந்தனர். இந்நிகழ்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணை செயலாளர் பாபு ஷாஹின்ஷா, மாநில தகவல் தொழில்நூட்ப அணி செயலாளர் கோட்டை ஹாரிஸ், சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா, மாவட்ட பொருளாளர் U.அமிர் உசேன், மாவட்ட துணை செயலாளர் S.சையத் முஸ்தபா, O.S.பாபு, A.மஹபூப் அலி, A.ஷேக் ரபீக், B.முபாரக் மற்றும் அணி நிர்வாகிகள் K.சதாம் உசேன், A.முகமதுஅலி, H.முனவர்கான், அப்ரார் கான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சேலம்_மாவட்டம் 07.01.2018
முகவையில் முத்தலாக் விவகாரம்…! திரண்டது மக்கள் வெள்ளம்..!!
முகவை.ஜன.06., மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி #ஜமாத்துல்_உலாமா சார்பில் நேற்று தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாவட்ட செயலாளர் முகவை பீர் முகம்மது அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார். இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த தலைவர்களும், மார்க்க அறிஞர்களும் உரையாற்றினர். இதில் பல்லாயிரகணக்கானோர் திரண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_இராமநாதபுரம்_கிழக்கு_மாவட்டம். 05.01.2018
திருவாரூரில் திரண்ட சமுதாய எழுச்சி..!
திருவாரூர்.ஜன.5., திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் நேற்று (05-01-2018) வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலாம சபை மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கினைந்த கூட்டமைப்பு சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கண்டன பொதுக்கூட்டத்தில் அல்ஹாஜ் TMA முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் தலைமைவகிக்க, ஜமால் ஷேக் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு உறுப்பினர் AS.அலாவுதீன், பழ.கருப்பையா போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த பல தலைவர்கள் மற்றும் மெளலவி S.பக்ருதீன் பைஜில் போன்ற மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்கள். இந் நிகழ்ச்சியில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் சந்திக்கும் முதல் மேடை எனபது குறிப்பிட தக்கது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறுதியாக ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். தகவல்; #மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவாரூர்_மாவட்டம். 06.01.2018