
திருவாரூர்.ஜன.5., திருவாரூர் மாவட்டம் தெற்கு வீதியில் நேற்று (05-01-2018) வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில்
மத்திய அரசு கொண்டுவரும் ஜனநாயக விரோத இஸ்லாமிய பெண்கள் முத்தலாக் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஜமாஅத்துல் உலாம சபை மற்றும் அனைத்து ஜமாஅத் ஒருங்கினைந்த கூட்டமைப்பு சார்பாக
கண்டன பொதுக்கூட்டம்
நடைபெற்றது.
இக்கண்டன பொதுக்கூட்டத்தில்
அல்ஹாஜ் TMA முஹம்மது இல்யாஸ் உலவி அவர்கள் தலைமைவகிக்க, ஜமால் ஷேக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) தலைமை நிர்வாககுழு
உறுப்பினர் AS.அலாவுதீன்,
பழ.கருப்பையா போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சார்ந்த பல தலைவர்கள் மற்றும் மெளலவி S.பக்ருதீன் பைஜில் போன்ற மார்க்க அறிஞர்கள் பங்கெடுத்து கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்ச்சியில் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் AS.அலாவுதீன் அவர்கள் சந்திக்கும் முதல் மேடை எனபது குறிப்பிட தக்கது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இறுதியாக ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்.
தகவல்;
#மஜக_தகவல்_ தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவாரூர்_மாவட்டம்.
06.01.2018