மதுரை. மே.26., #ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் அறவழியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது, 100வது நாளில் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி 15-க்கும் மேற்பட்ட பொது மக்களை படுகொலை செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பயங்கரவாத செயலை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் #புரட்சிகர_தொழிலாளர்_முன்னனி மற்றும் ஒடுக்கப்பட்ட_மக்கள்_முன்னனி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் மதுரை வடக்கு மாவட்டசெலாளர் ஒத்தக்கடை பாரூக் அவர்கள் கண்டன உரையாற்றினர், இதில் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மதுரை_வடக்கு_மாவட்டம் 25-05-2018
தமிழகம்
தமிழகம்
தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்பு…!!
அறந்தாங்கி.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படும் ஸ்டெர்லைட் உயிர்கொல்லி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார். இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் ஜாமீன், மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர் ஆகிய மஜக நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் திமுக, காங்கிரஸ், மமகமற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 25.05.2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 24.05.2018
தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! பேராவூரணியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டம் மஜக பங்கேற்பு…!!
பேராவூரணி.மே.24., தூத்துக்குடியில் நேற்றும், நேற்று முன்தினமும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொருப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் கலந்து கொண்டு பேசினார். இதில் மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்கவலசை ராஜ் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பேராவூரணி அசார், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதனூர் தினேஷ் , சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலாளர் சபிக்கான் மற்றும் பேராவூரணி மாணவரணி, இளைஞர்அணி மற்றும் நகர நிறுவாகிகள் அசார், அஜ்மல், ஆகிய மஜக மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள்புரட்சி கழகம், திராவிட விடுதலை கழகம் தமிழர் நல பேரியக்கம், மற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம். 23.05.2018
தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்களை மீது துப்பாக்கி சூடு..! காவல்துறையை கண்டித்து மஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்..!!
சென்னை. 24., தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இப்போராத்தில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் தலைமை தாங்கி, கண்டன உரையை நிகழ்த்தினார்கள். மஜக பொருளாளர் கண்டன உரையை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 1996 –ஆம் ஆண்டு முதல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக வடிவம் பெற்று, எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கோரிக்கை போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 12க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக SNIPER’S என்னும் காவல் உடை அணியாத ஏவல் படையைக்கொண்டு, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டது என்பது அப்பட்டமான அரசு படுகொலை. நிலத்தடி நீர் மாசு, , மலட்டுத்தன்மை, புற்றுநோய் , தோல் நோய் விவரிக்க முடியாத வியாதிகள் என தூத்துக்குடி சுற்றுவட்டார 18 கிராம மக்களின் துயரங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க