வடியாத வெள்ளநீர் அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்ற மஜக பேரிடர் மீட்புக்குழு! மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்!


டிச.07,
கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆணைக்காரன் சத்திரம், செய்யது நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் 200 மேற்பட்ட குடும்பங்கள் சிரமப்படுவதாக மஜக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தரப்பட்டது.

அதனடிப்படையில் நேரில் சென்ற மஜக பேரிடர் மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்தனர்.

மேலும், அம்மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு அடிப்படை தேவைகள் குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.

போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை நிறைவேற்றி தரவேண்டும் என வலியுறுத்திய மஜகவினர் தவறும்பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன், பொருளாளர் தைக்கால் ஷாஜஹான், துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், அசேன் அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மு.ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், தைக்கால் கிளை பொறுப்பாளர்கள் ஷேக் முஹம்மது, மன்சூர் அலி, முஹம்மது வலீது மற்றும் மஜக பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்கள் ஐயப்பன், மணி, காத்தமுத்து, மனோஜ் குமார், முஹம்மது பாசித், முஹம்மது பாயிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.