You are here

உணவின்றி தவித்தவர்களுக்கு முதற்கட்ட உதவி! லால்பேட்டை மஜக பேரிடர் மீட்பு குழுவினரின் மனிதநேய செயல்!!


டிச.07,
கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும் வீராணம் ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீர் சூழ்ந்தும் வாழ்வாதார இழந்து தவித்த மக்களுக்கு லால்பேட்டை மஜக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது.

தொடர்மழையினால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் வேலைக்கு செல்ல முடியாததால் உணவின்றி தவிப்பதாக மஜகவினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கொட்டும் மழையிலும் சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு மஜக நகர அலுவலகத்தில் வைத்து உணவு தயாரித்து மஜகவினரால் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டன.

தொடர்ந்து மஜக பேரிடர் மீட்பு குழுவினர் தனிதனி குழுவாக சுற்றுவட்டார பகுதிகளுக்கு உணவுப் பொட்டலங்களை எடுத்து சென்று கொட்டும் மழையிலும் விநியோகித்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.
06/12/2020

Top