தமிழகத்தை சேர்ந்த பிலிப்பைன்ஸ் மாணவர்களும் ஈரான் மீனவர்களும் மீட்கப் படுவார்களா.? கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் சட்ட சபையில் முதமி முன் அன்சாரி MLA கேள்வி.!

இன்று சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்கள், விதி 55-ன் கீழ், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளை பாதித்தது போல் ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் பாதித்திருக்கிறது.

வரலாற்றில் முதல் முறையாக சிங்கப்பூர் மலேசியா எல்லை மூடப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ்க்கு மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் நேரடி விமான சேவை இல்லாததால் நாடு திரும்பும் வழியில், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவிப்பதாக சமூக இணையதளங்கள் வழியாக அறிகிறோம்.

அவர்களுக்கு அங்கு விமான நிலையத்தில் தங்க பாதுகாப்பான ஏற்பாடுகளை நமது இந்திய வெளியுறவுத்துறை செய்திருக்கிறதா?

இதுகுறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி இருக்கிறதா? என்பதை அறிய விரும்புகிறேன்.

அதுபோல் நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டு கடல் எல்லையில் சிக்கித் தவிப்பதாக அறிகிறோம்.

அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?அவர்கள் குடும்பத்தினருக்கு உரிய தகவல் சொல்லப்பட்டிருக்கிறதா? என்பதையும் தங்கள் வாயிலாக அரசிடம் கேட்டு அமர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதே கேள்வியையொட்டி பேசிய உறுப்பினர்கள் ஆஸ்டின், பிரின்ஸ் ஆகியோருக்கும் சேர்த்து பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அவர்கள், “கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் விசாகப்பட்டினம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தகுந்த மருத்துவ சோதனை, சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் கூறினார்.

ஈரான் நாட்டு கடல் எல்லையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் பதில் அளித்தார்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி,
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்
19-03-2020

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*