தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!

திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது.

இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
24.05.2018