அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத் தலைவர் திரு.மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். நீண்ட காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகராக வலம் வந்த அவரது மரணம் அக்கட்சிக்கு முக்கிய இழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் அதிமுக தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் இவண், மு.தமிமுன் அன்சாரி, பொதுச் செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 05.08.2021
பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி
சீரமைக்கப்படும் நாகை மரைக்காயர் குளம் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரிபார்வையிட்டார்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகைக்கு வருகை தந்தார். அப்போது நாகை முஸ்லிம் ஜமாத் அலுவலகத்திற்கு அழைப்பின் பேரில் வருகை தந்தார். அங்கு ஜமாத்தினர் வரவேற்பு அளித்து அவருடன் உரையாடினர். பிறகு அவர் MLA வாக இருந்த போது, அவரது முயற்சியில், ONGC மூலம் சேவை நிதியில், சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டார். காலை நேரத்தில் பெண்கள் நடைபயிற்சி செய்யவும், மாலை நேரங்களில் இருபாலரும் குடும்பத்துடன் பொழுது போக்கும் வகையிலும் இக்குளம் சீரமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அவரது ஆலோசனைகளையும் ஜமாத்தினரிடம் கூறினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
மஜக இல்ல மணவிழாக்கள்… பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
நாகை மாவட்ட மஜக துணைச் செயலாளர் கண்ணுவாப்பா அவர்களின் தம்பி மணமகன் M. முகம்மது அபுபக்கர் அவர்களுக்கும், மணமகள் M. பெனாசிர் பேகம் அவர்களுக்கும் இன்று திருமணம் நாகையில் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். பிறகு தோப்புத்துறை மஜக சகோதரர் மணமகன் N.முகம்மது மக்தூம் அவர்களுக்கும், மணமகள் A.சஹானா அவர்களுக்கும் திருவாரூர் மாவட்டம் கட்டிமேட்டில் இன்று திருமணம் நடைப்பெற்றது. அதனையொட்டி மணமகள் இல்லத்திற்கு சென்று அவர்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மஜக மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.
சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வன்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி நேரில் ஆறுதல்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சார்ந்த மீனவர் கலைச்செல்வன், (வயது 33) இலங்கை கடற்படையினரால் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்துள்ளார். தற்போது, நாகை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வனை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது சிகிச்சை நிலவரம் குறித்து நிலைய மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரன், அவர்களிடம் கேட்டறிந்தார் அப்போது மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, நகர செயலாளர் அஜீஸ், சம்பத் ஆகியோர் உள்ளிட்ட மஜக வினரும் உடனிருந்தனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 04.08.2021
மஜக தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்த காணொளி ஆய்வுக் கூட்டம் 03-08-2021 செவ்வாய்கிழமை காலை 12„ மணிக்கு தேனி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கலில் ரஹ்மான், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். அவருடன் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் பங்கேற்றார். பொதுச்செயலாளர் உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்தும், மாவட்ட பொறுப்பு குழுவை கலைத்து புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பற்றி ஆலாசனைகள் செய்யப்பட்டது. இதில் தேனி மாவட்ட செயலாளராக கம்பம் கரீம், அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரியாஸ், சேக்பரீத், தாஹா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்