மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்த காணொளி ஆய்வுக் கூட்டம் 03-08-2021 செவ்வாய்கிழமை காலை 12„ மணிக்கு தேனி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கலில் ரஹ்மான், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள்.
அவருடன் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் பங்கேற்றார்.
பொதுச்செயலாளர் உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்தும், மாவட்ட பொறுப்பு குழுவை கலைத்து புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பற்றி ஆலாசனைகள் செய்யப்பட்டது.
இதில் தேனி மாவட்ட செயலாளராக கம்பம் கரீம், அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரியாஸ், சேக்பரீத், தாஹா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்வின் இறுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அம்ஜத் மீரான், அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தேனி_மாவட்டம்
03.08.2021