மனிதநேய ஜனநாயக கட்சியின் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்த காணொளி ஆய்வுக் கூட்டம் 03-08-2021 செவ்வாய்கிழமை காலை 12„ மணிக்கு தேனி மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கம்பம் கரிம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கலில் ரஹ்மான், அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். அவருடன் துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, அவர்களும் பங்கேற்றார். பொதுச்செயலாளர் உரையில், தற்போது உள்ள கொரோனா நோய் தொற்றிலிருந்தும், பொருளாதார நெருக்கடியிலிருந்தும் அனைவரும் தங்களையும், தங்களது குடும்பத்தாரையும் பாதுகாத்து கொள்ளும்படியும், சூழல் விரைந்து சீர்பெற வேண்டி பிரார்த்திக்கும்படி கேட்டு கொண்டார். மேலும் இக்கூட்டத்தில் தேனி மாவட்ட செயல் பாடுகள் குறித்தும், மாவட்ட பொறுப்பு குழுவை கலைத்து புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, புதிய ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பற்றி ஆலாசனைகள் செய்யப்பட்டது. இதில் தேனி மாவட்ட செயலாளராக கம்பம் கரீம், அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரியாஸ், சேக்பரீத், தாஹா, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்வின் இறுதியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்
மஜக ஆலோசனை கூட்டம்
மஜகவின் நல்லிணக்க அரசியல் காலத்தின் தேவையாகும்! செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு!
செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! ஜூலை.14., மஜக வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் பொதுக்குழு கூட்டம் தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார். முன்னதாக கட்சியின் தொழிற்சங்கமான MJTS ன் கொடியை இந்து மிஷன் ஆஸ்பத்திரி எதிரே தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பொதுக் குழுவை முன்னிட்டு தாம்பரம்- ரங்கநாதபுரம் முழுக்க மஜக கொடிகள் கட்டப்பட்டு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அதில் புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டது. பொறுப்புக்கு இருவர் முன்மொழியப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெற்றது. அதில் தாம்பரம் . ஜாஹீர் உசேன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் துணைச் செயலாளர் ஷஃபி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர். பின்னர் அம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 இளைஞர்கள் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். நிறைவாக பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், மஜக சமூக
மஜக நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்!! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்பு!!
நீலகிரி:டிச.20., மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அமைப்புக்குழு தலைவர் காலித், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச்செயலாளர் கோவை AK.சுல்தான் அமீர், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்புக்கள் குறித்தும், புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்தும், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார், அவருடன் மாணவர் இந்தியா மாநில செயலாளர் பொரியார் கார்த்தி, அவர்களும் பங்கேற்றார். இதில் நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு மாற்றப்பட்டு புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் அமைப்புக் குழு நிர்வாகிகள்,குன்னூர் நகர நிர்வாகிகள், உள்ளிட்ட மஜக வினர் கலந்து கொண்டனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 19.12.2020
மஜக வேலூர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு.!
சென்னை.டிச.12., மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் 11-12-2020 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது பங்கேற்றார் உடன் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களும் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான SG.அப்சர் சையத் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தி புதிய உறுப்பினர்களை சேவை அரசியலில் இணைக்கும் பணியை மும்முரப்படுத்துவது குறித்தும், மேலும் புதிய ஒன்றியங்கள் மற்றும் பல்வேறு புதிய கிளைகளை கட்டமைக்கபட வேண்டும் போன்ற கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின், மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன்,இளைஞர் அணி செயலாளர் அமீன் வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #வேலூர்_மாவட்டம் 11-12-2020
மஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு.!
சென்னை.டிச.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் 08-12-2020 அன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார், மேலும் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபியும் உடனிருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தும், மாவட்டத்தின் கிளை முதல் ஒன்றியம் வரை பொதுக்குழு நடத்தி நிர்வாக தேர்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கல்பாக்கம் அப்துல் ரஷீது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களான ஜாஹிர், பக்ருத்தீன் ஆகியோர் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #செங்கை_தெற்கு_மாவட்டம் 08-12-2020