செங்கை வடக்கு மாவட்ட பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு! ஜூலை.14., மஜக வின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் மற்றும் பொதுக்குழு கூட்டம் தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைப்பெற்றது. இதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்றார். முன்னதாக கட்சியின் தொழிற்சங்கமான MJTS ன் கொடியை இந்து மிஷன் ஆஸ்பத்திரி எதிரே தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். பொதுக் குழுவை முன்னிட்டு தாம்பரம்- ரங்கநாதபுரம் முழுக்க மஜக கொடிகள் கட்டப்பட்டு, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அதில் புதிய மாவட்டச் செயலாளர் தேர்வு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்டது. பொறுப்புக்கு இருவர் முன்மொழியப்பட்ட நிலையில், தேர்தல் நடைபெற்றது. அதில் தாம்பரம் . ஜாஹீர் உசேன் அவர்கள் அதிக வாக்குகள் பெற்று மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத் துணைச் செயலாளர் ஷஃபி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாரிக், மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக செயல்பட்டு தேர்தலை நடத்தினர். பின்னர் அம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி 25 இளைஞர்கள் பொதுச் செயலாளர் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். நிறைவாக பேசிய பொதுச் செயலாளர் அவர்கள், மஜக சமூக
செயல் வீரர்கள் கூட்டம்
மஜக கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்!
ஜன.27., மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, அவர்கள் வரவேற்பு உரையாற்றினார். இதில் மாவட்ட அணி நிர்வாகங்களின் செயலாளர்கள் அவரவர் அணி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், உரையாற்றினர். மேலும் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்கெடுப்பு குறித்தும் மஜக வின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்தும், தேர்தல் நிலைப்பாடு குறித்தும், நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக உரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், அபு, தொழிற்சங்க