மஜக கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்!


ஜன.27.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் முஸ்தபா, அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்.

இதில் மாவட்ட அணி நிர்வாகங்களின் செயலாளர்கள் அவரவர் அணி சார்ந்த செயல்பாடுகள் குறித்தும், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்தும், உரையாற்றினர்.

மேலும் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், அவர்கள் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்கெடுப்பு குறித்தும் மஜக வின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாகிகளின் பங்களிப்புகள் குறித்தும், தேர்தல் நிலைப்பாடு குறித்தும், நிர்வாகிகள் கூட்டத்தில் விரிவாக உரையாற்றினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் சிங்கை சுலைமான், அபு, தொழிற்சங்க மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட பொருளாளர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர் அன்சர், IKP மாவட்ட செயலாளர் ஹனீப், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹிம், இளைஞரணி மாவட்ட செயலாளர் அன்சர், துணை செயலாளர்கள் சதாம், பைசல், செய்யது, வணிகர் சங்க மாவட்ட பொறுப்பாளர்கள் ஹாருண், நெளபல் பாபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், பகுதி, கிளை, நிர்வாகிகள், உறுப்பினர்கள், திரளானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

1.டெல்லியில் அமைதியான முறையில் போராடி வரும் விவசாயிகளை மத்திய அரசு தனது அரசு பலத்தால் ஒடுக்க நினைப்பதை கண்டிப்பதுடன் விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் வேளாண் சட்டங்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2.தமிழகத்தில் மத்திய அரசு மக்களுக்கு எதிரான CAA.NRC.NPR. சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்கள் மீது தமிழக அரசால் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய இக்கூட்டம் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

3.14 ஆண்டுகளை பூர்த்தி செய்த 60 வயதுக்கு மேலாக உள்ள சிறைவாசிகளை ஜாதி, மத,பேதமின்றி தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

நிகழ்வின் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் ATR. பதுருதீன், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26.01.2021