2021 தேர்தலில் மஜக வெற்றிக்காக பாடுபடுவோம்! குவைத் மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!


குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவையின் 3-வது மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி 22 அன்று மாலை 7 மணிக்கு முர்காப் சிட்டியில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைபெற்றது.

இச்செயற்குழு கூட்டம் மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது, அவர்கள், மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ், அவர்கள் ஆகியோர் முன்னிலையில், கிளை நிர்வாகிகளை கொண்டு நிகழ்ச்சி நிரல் வழி நடத்தப்பட்டது, நிகழ்ச்சியின் துவக்கமாக ஜஹ்ரா கிளை செயலாளர் திருப்பத்தூர் கபூர் அவர்கள் நீதிபோதனை வழங்க குர்துபா கிளை துணை செயலாளர் திருவாடுதுறை ஆசிக், வரவேற்புரை வழங்கினார்.

இதில் மனிதநேய கலாச்சார பேரவையின் கட்டமைப்பு குறித்து மண்டல ஆலோசகர் இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள் கடந்து வந்த பாதையை விவரித்தார், தொடர்ந்து “நாம் அரசியலில் பயணிப்பது ஏன்?” என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் வேலம்புதுக்குடி சர்புதீன் அவர்கள், “இளைய சமுதாயம் மஜகவில் இணைவது ஏன்?” என்ற தலைப்பில் மண்டல துணை செயலாளர் கோணுழாம்பள்ளம் அன்சாரி அவர்கள், “கிளைகளும் மண்டல நிர்வாகமும்” என்ற தலைப்பில் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் பரங்கிப்பேட்டை ஹாஜா மக்தும் அவர்கள், “மஜகவின் மனிதநேய பணிகள்” என்ற தலைப்பில் மண்டல தொண்டரணி செயலாளர் ஆயங்குடி அபுல் உசேன் அவர்கள், “தொழிலார்களுக்கு ஆற்றும் தொண்டு” என்ற தலைப்பில் மண்டல தொழிலாளர் அணி செயலாளர் மேலப்பாளையம் ஜமால் அலி அவர்கள், “மற்ற கட்சிகளைவிட மஜக வேறுபடுவது ஏன்?” என்ற தலைப்பில் மண்டல ஊடகத்துறை இணை செயலாளர் திருக்கோவிலூர் சலீம் அவர்கள், மஜக வின் மருத்துவ சேவைகள் குறித்து மண்டல மருத்துவ அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன் அவர்கள் மற்றும் “தேர்தல் நிதியின் அவசியம்” குறித்து மண்டல பொருளாளர் பொதக்குடி சதக்கத்துல்லாஹ் அவர்கள் ஆகியோர் உரையாற்றினர்.

தொடர்ந்து மஜகவின் செயல்பாடுகளையும் தலைமை நிர்வாகிகளின் ஆளுமைகளை எடுத்துரைத்து மண்டல, கிளை நிர்வாகிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்று மண்டல செயலாளர் நீடுர் முஹம்மது நபிஸ், விவரித்தார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.2021 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தலைமை நிர்வாக குழு முடிவை ஏற்பது.

2.மஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற பாடுபடுவது.

3. மஜக போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது.

4.இந்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயம் திருத்த மசோதாவை திரும்ப பெறவேண்டும் கோருவது.

5.பொது மின்சார சட்டம் என்று புதிய சட்டத்தை புகுத்துவதை மத்திய அரசு நிறுத்தவேண்டும்.

6.தேர்தலில் வெற்றிபெறும் புதிய அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் உருவாக்கவேண்டும்.

7.மண்டலம் சார்பாக ஆறாம் ஆண்டு பொது கூட்டம் நடத்துவது.

மேலும் கடந்த 2020ம் ஆண்டு கொரானா கால கட்டத்திலும் மனிதநேய அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு தொண்டாற்றிய மண்டல நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது, அனைத்து கிளைகளுக்கும் 2021ம் ஆண்டுக்கான கிளை செயல்பாடு குறிப்பேடு (மினிட் நோட்) வழங்கப்பட்டது

இறுதியாக ரிக்கை கிளை பொறுப்பாளர் மணிக்கிராமம் ஹபீப் ரஹ்மான், அவர்கள் நன்றியுரையாற்ற இனிதே நிறைவுற்றது.

தகவல் :

#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKP_IT_WING
#குவைத்_மண்டலம்