மஜக சார்பில் கல்வி உதவி தொகை இலவச பதிவு முகாம்..!

அறந்தாங்கி செப்.04., மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பதிவு முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

மஜக மணமேல்குடி ஒன்றியம் சார்பில் கோட்டைப்பட்டிணம் செக்போஸ்ட் அருகில் சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெறும் இலவச பதிவு முகாம் நடைபெற்றது.

இம்முகாம் மாவட்ட பொருளாளர் சாஜிதீன் தலைமையில், ஒன்றிய செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாவட்ட துணை செயலாளர் உமர் கத்தாப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் ஹாரிஸ் முதல் பதிவை துவக்கி வைத்தார். கிளை செயலாளர் தாஜீதீன், கிளை பொருளாளர் சுபையர்கான், கிளை து.செயலாளர் சதாம்உசேன், மணமேல்குடி MJTS ஒன்றிய செயலாளர் தனபால், மணமேல்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் தமிம் அன்சாரி, ஒன்றிய மருத்துவ அணி செயலாளர் ஜவாகிர்தீன், செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MjkitWing
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்
04.09.21

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.