
மார்ச்.30,
இன்று திருச்சி (கிழக்கு) தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இனிகோ.இருதயராஜ் (கிறித்துவ நல்லெண்ண இயக்கம்) அவர்களுக்கு ‘உதயசூரியன்’ சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பரப்புரை செய்தார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு சமூக சேவையில் ஈடுபட்ட சேவை எண்ணம் கொண்டவர் இனிக்கோ இருதயராஜ் என தனது பரப்புரையில் குறிப்பிட்டு அவரை தனது இனிய நண்பர் என்றும் கூறி வாக்கு கேட்டார்.
இதில், மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா.மைதீன் அப்துல் காதர் தலைமையில் பொருளாளர் அந்தோணிராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், துணைச் செயலாளர்கள் சையது முஸ்தபா, ஷேக் அப்துல்லா, முஹம்மது பீர்சா மற்றும் அப்பகுதியை சேர்ந்த மஜக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING #TNElection2021
#திருச்சி_மாவட்டம்.