
சென்னை.டிச.12.,
மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் 11-12-2020 அன்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது பங்கேற்றார் உடன் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்களும் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான SG.அப்சர் சையத் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தி புதிய உறுப்பினர்களை சேவை அரசியலில் இணைக்கும் பணியை மும்முரப்படுத்துவது குறித்தும், மேலும் புதிய ஒன்றியங்கள் மற்றும் பல்வேறு புதிய கிளைகளை கட்டமைக்கபட வேண்டும் போன்ற கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முஹம்மது யாசின், மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன்,இளைஞர் அணி செயலாளர் அமீன் வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில் ஆகியோர் பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
11-12-2020