
டிச.11
மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சார பேரவையின் குவைத் மண்டலம் சார்பாக நேற்று ‘நவீன இந்தியாவும், மனித உரிமை மீறல்களும்..’ என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் அவர்கள் ‘நசுக்கப்படும் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து தாயகத்திலிருந்து CPI(M) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ் அவர்கள் ‘ மனித உரிமை மீறலும், மோடி அரசும்’ என்ற தலைப்பில் பாஜக ஆட்சியில் நடைப்பெறும் மனித உரிமை மீறல்களை தமது சிறப்புரையில் பட்டியலிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து கலந்துக் கொண்ட பல்வேறு அமைப்புகளின் பிரமுகர்கள் கருத்துரைத்தனர்.
துவக்கமாக மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் சுவாமிமலை ஜாஹிர் உசேன் அவர்கள் கிராத் ஓத, மண்டல துணை செயலாளர் ஏனங்குடி முஹம்மது பாஜில் கான் அவர்கள் வரவேற்பு வழங்க மண்டல ஆலோசகர் சகோ.இளையாங்குடி சீனி முஹம்மது அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இறுதியாக மண்டல செயற்குழு உறுப்பினர் அம்மாபேட்டை சையது அபுதாஹிர் அவர்கள் நன்றியுறையுடன் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
தகவல்,
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#MKP_IT_WING
#குவைத்_மண்டலம்.
10.12.2020