மஜக சகோதரர் வீரபாண்டியன் இல்ல திருமணவிழா! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்!

செங்கை:டிச.11.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் சிறைவாசம் கண்ட சகோதரா் வீரபாண்டியன், அவர்களின் சகோதரர் ஜெயராமன், ஜனனி, ஆகியோரின் திருமணவிழா செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் நடைபெற்றது.

இத்திருமண நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளா் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது, அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அவருடன் துணை பொதுச்செயலாளா் தைமிய்யா, மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், செங்கை வடக்கு மாவட்ட பொருளாளா் ஆலந்தூர் சலீம், மாவட்ட துணை செயலாளர் இ.சி.ஆர். அப்துல் சமது, பல்லாவரம் அஜீஸ் மாவட்ட இளைஞரணி செயலாளர் பாரூக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பிராங்க்ளின், மற்றும் மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்