You are here

வெள்ளம் பாதித்த திருக்கருக்காவூர் கீரானல்லூர்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பார்வையிட்டு ஆறுதல்!


டிச 11,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அங்கெல்லாம் மஜக பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அவற்றை பார்வையிடுவதற்காக இப்பகுதிக்கு பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்.

காலை தைக்கால், வடகால் பகுதிகளுக்கு சென்றவர், மாலை திருக்கருக்காவூர் மற்றும் கீரானல்லூர் கிராமங்களுக்கு வருகை தந்தார்.

அங்கு வயலில் இறங்கி மூழ்கிய பயிர்களை கையிலெடுத்து அவற்றின் நிலை குறித்து விசாரித்தார். பிறகு அங்கிருந்த விவசாய தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அவர்களின் பிரச்சனைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக கூறினார்.

பிறகு கீரானல்லூர் கிராமத்திற்கு வருகை தந்தார். இங்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கரீமா பர்வீன் மஜக சார்பில் தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு மஜக சகோதரர் சபீர் அனைவரையும் வரவேற்று கூட்டி சென்றார்.

அங்கு கிராம மக்கள் தங்கள் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதையும், கால்நடைகள் இறந்துள்ளதையும் சுட்டிக் காட்டினர்.

தான் இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சீர்காழி தொகுதி பாரதி MLA ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.

நேரம் இருட்டிய காரணத்தால் பிற கிராமங்களுக்கு போக முடியவில்லை.

அவருடன் மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் சங்கை தாஜுதீன், மாவட்ட துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் மஜக பேரிடர் மீட்பு குழுவினரும் உடன் இருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மயிலாடுதுறை_மாவட்டம்
11.12.2020

Top