சென்னையில் புதிய குடியுரிமை சட்டத் திருத்ததில் திருத்தம்செய்யக் கோரி போராட்டம் : மஜகவினர் கைது



சென்னை.டிச.13..,

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்து, இலங்கை தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவழி முஸ்லீம்களையும் அதில் இணைக்ககோரி 7 கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் சென்னை அண்ணாசாலையில் நேற்று 12-12-2019 மாலை மாபெரும் சட்ட நகல் கிழிக்கும் கூட்டுப் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்று புதிய குடியுரிமை சட்ட நகலை கிழித்தெரிந்து போராட்டத்தில் ஆர்ப்பரித்தனர்.

கைதுக்கு போதிய வாகனங்கள் இல்லாத காரணத்தால் கைதாக முடியாதவர்கள், நடந்தே மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு வீதிகளில் ஊர்வலமாக திரண்டனர்,

சென்னையின் பல முக்கிய வீதிகளின் வழியே சென்றதால், அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்தன.

போராட்டத்தில் மஜக துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்கலம் சமீம், பல்லாவரம் ஷஃபி, காயல் சாகுல், ஷைபுல்லாஹ், மாநில இளைஞரணிச் செயலாளர் அசாருதீன், MJTS தலைவர் பம்மல் சலீம், மாணவர் இந்திய மாநிலப் பொருளாளர் பஷிர், IKP துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் மீரான்.

மேலும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் யூசுப், அபுதாஹிர், மாவட்டச் செயலாளர்கள் பிஸ்மி, கையூம், ஜிந்தா மதார், அக்பர் உசேன், நாசர், அன்வர், மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொருப்புக்குழு தலைவர் சாகுல் ஹமீது உள்ளிட்ட மாவட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளானோர் பங்கேற்று கைதாகினர்.

தகவல்:-

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
12-12-2019