சட்டநகலை கிழித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆவேசம்..!
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து இலங்கை தமிழர்களையும், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முஸ்லீம்களையும் அதில் இணைக்க கோரி 7 கட்சி மற்றும் அமைப்புகளின் சார்பில் சட்ட நகல் கிழிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தடையை மீறி 800-க்கும் மேற்பட்ட போராட்டக்காரார்கள் சென்னை அண்ணாசாலை அருகே கூடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக அந்த சட்டத்தின் நகல்களை கிழித்து எறிந்தனர். பிறகு, அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கருணாஸ் MLA, மு.தமிமுன் அன்சாரி MLA, வேல்முருகன்Ex.MLA, செ.ஹைதர் அலி, விடுதலை.ராஜேந்திரன்(திவிக), இயக்குனர்.கெளதமன் (தமிழ் பேரரசு கட்சி), குடந்தை அரசன், பிரவின்(மே-17), KM.ஷெரீப்(TNJK), இளையராஜா,(தமிழ்நாடு மக்கள் கட்சி), வழக்கறிஞர் ரஜினி(மக்கள் அரசு கட்சி), காந்த், தவசி(திவிக), குமரன்(த.பெ.தி.க), பேரரிவாளன்(தமிழ் புலிகள் கட்சி), செள.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட தலைவர்கள் உட்பட நூற்றுகணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
போதிய வாகனங்கள் இல்லாததால் போராட்ட காரர்கள் அனைவரையும் கைது செய்யாமல் காவல் துறை தவிர்த்தது, குறைவான வாகனங்களில் கைது செய்யப்பட்டவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அழைத்து சென்றனர்.
இதை அறிந்து வாகனகள் இல்லாத காரணத்தால் கைதாக முடியாதவர்கள், நடந்தே மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு வீதிகளில் ஊர்வலமாக திரண்டனர்.
வழியெங்கும் மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை சட்டட்திருத்தத்தின் நகலை கிழித்து எரிந்து ஆர்ப்பரித்தனர்.
சென்னையின் பல முக்கிய வீதிகளின் வழியே கைதானவர்களின் வாகனங்கள் சென்றதால், அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கங்கள் பொதுமக்களை திரும்பி பார்க்க வைத்தன.
வட கிழக்கு மாநிலங்களை போல், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் பற்றி எரிய தொடங்கி இருக்கின்றன.
செய்தி தொகுப்பு:- போராட்டக் குழு
https://m.facebook.com/story.php?story_fbid=2150743378358759&id=700424783390633