#குடியுரிமை திருத்தமசோதாவுக்கெதிராகத் திரண்டஜமாத்தார்கள்!
திருச்சி.டிச.13,
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (13/12/2019) வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பின் பாலக்கரை முகமதுபூறா பள்ளிவாசலில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவினால் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து பேரா.மைதீன் விளக்க உரையாற்றினார்.
மஜக ஏற்பாட்டில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இம்மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியும் நடைப்பெற்ற இந்நிகழ்வில் ஜமாத்தார்கள் முன்னிலை வகிக்க முஹல்லாவாசிகளும், பொதுமக்களும் திரண்டு நின்று உரையை செவிமடுத்தனர்.
மஜக மாவட்டச் செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் ஷா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பக்கீர் மைதீன், தர்கா பாரூக், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் கமால், பகுதி செயலாளர்கள் காதர், முகமது பீர்ஷா மற்றும் ஆழ்வார்தோப்பு சேட் உள்ளிட்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்.