சென்னை.ஜூன்.30., கடந்த (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.
(பகுதி : 03)
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…
NEET தேர்வு என்பது பின் தங்கிய சமூகங்களுக்கும், கிராமப்புற மாணவ, மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது என்பதாலயே இந்த அவையில் உள்ள அனைவரும் ஒரே குரலில் எதிர்க்கிறோம்.
தற்போது, இதில் அரசுப் பள்ளிகளில் பயின்று NEET தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வசதி ஏற்படுத்தும் வகையில் 3% சதவித உள் இட ஒதுக்கீட்டை, அதில் வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட முயற்சி எடுக்க வேண்டும்.
இது மஹராஷ்டிரா, ஆந்திராவில் நடைமுறையில் உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் J. P நட்டா அவர்கள்,
15-04-2018 அன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது, இதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று கூறியதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.