காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.

(பகுதி 4)

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரசாயணமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தந்ததற்கும்,

பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து, ஊக்குவிக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு, “பாரத ரத்னா டாக்டர் MGR பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது” வழங்கப்படும் என அறிவித்ததற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான #காவிரி_டெல்டா மாவட்டங்களை ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘ உடனடியாக அறிவிக்க தமிழக முதல்வர் அவர்கள் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் காவிரி சமவெளி பாதுகாக்கப்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கோரிக்கை நீண்ட காலமாக விவசாய சங்கங்களாலும், டெல்டா மாவட்ட மக்களாலும் வலுயுறுத்தப்பட்ட ஒரு கோரிக்கை என்பதும், இதை வலியுறுத்தி இரண்டாவது முறையாக பேசும் #ஒரே_சட்டமன்ற_உறுப்பினர் இவர்தான் என்பது கூறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*