மஜக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு.!


சென்னை.டிச.09.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மஜக தலைமையகத்தில் 08-12-2020 அன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா அவர்கள் பங்கேற்று, மாவட்டத்தின் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார், மேலும் மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைச் செயலாளருமான பல்லாவரம் ஷஃபியும் உடனிருந்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துவது குறித்தும், மாவட்டத்தின் கிளை முதல் ஒன்றியம் வரை பொதுக்குழு நடத்தி நிர்வாக தேர்வு செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் கல்பாக்கம் அப்துல் ரஷீது, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்களான ஜாஹிர், பக்ருத்தீன் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_தெற்கு_மாவட்டம்
08-12-2020

Top