முத்துப்பேட்டையில் பொதுச்செயலாளர் முன்னிலையில் மஜகவில் இணைவு!


டிச.10,

இன்று முத்துப்பேட்டையில் புதிதாக பலர் தங்களை பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இங்கு தற்போது மஜகவின் 75 நாட்கள் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமுமுக சகோதரர் முத்துப்பேட்டை பைசல் அவர்களின் திருமணத்தை முன்னிட்டு, அவரது வீட்டுக்கு சென்ற பொதுச் செயலாளர் மணமக்களை வாழ்த்தினார்.

பிறகு அவ்வூர் பிரமுகர்களையும் சந்தித்து பேசினார்.

அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாநில விவசாய அணி செயலாளர் சலாம், நகரப் பொருளாளர் பஷீர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.

Top