தைக்கால் வெள்ள சேதம்! முதல்வரிடம் மஜக கோரிக்கை மனு!


டிச.10,

மழை வெள்ள சேதங்களை பார்வையிட நேற்று மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்திருந்த தமிழக முதல்வரிடம் மஜக மாவட்ட செயலாளர் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கோரிக்கை மனுக்களை நேரில் கையளித்தனர்.

கடந்த தினங்களில் கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருந்த பகுதிகளில் உள்ள மக்களை மஜகவினர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டு அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இந்நிலையில் வெள்ளபாதிப்புகளை முதல்வர் பார்வையிட வருகிறார் என்ற செய்தியறிந்து அம்மக்களின் ஜிவாதார கோரிக்கைகளை பட்டியலிட்டு அவற்றை உடன் நிறைவேற்றி தர வேண்டி அப்பகுதி மக்களை ஒன்று திரட்டி முதல்வரிடம் கோரிக்கை மனுவை கையளித்தனர்.

முதல்வருடனான அப்பகுதி மக்களின் சந்திப்பை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., ஏற்படுத்தி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், மாவட்ட செயலாளர் சங்கை தாஜ்தீன், பொருளாளர் தைக்கால் ஷாஜஹான், துணை செயலாளர்கள் ஆக்கூர் ஷாஜஹான், அசேன் அலி,அஜ்மல் உசேன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஹலில் ரஹ்மான், ஒன்றிய துணை செயலாளர் அன்சர் அலி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மு.ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், தைக்கால் கிளை பொறுப்பாளர்கள் ஷேக் முஹம்மது, மன்சூர் அலி, முஹம்மது வலீது மற்றும் மஜக பேரிடர் மீட்பு குழு உறுப்பினர்கள் ஐயப்பன், மணி, காத்தமுத்து, மனோஜ் குமார், முஹம்மது பாசித், முஹம்மது பாயிஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.