You are here

நடிகர் சசிகுமார் அவர்களுடன் மஜக குவைத் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு!!

குவைத் நாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்திருக்கும் திரைப்பட சமூக ஆர்வலர், இயக்குநர், நடிகர் திரு. சசிகுமார் அவர்களை குவைத் மஜக-வின் மண்டல நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இதில் பரஸ்பரம் உடல் நலம் விசாரிப்புகளோடு திரு. சசிகுமார் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.

சமீபத்தில் வெளியான அயோத்தி என்ற படத்தில் இஸ்லாமியர்களின் மனிதநேய பணிகளையும், சேவையையும் பறைசாற்றும் விதத்தில் இருந்ததாகவும், தொடந்து இதுபோன்ற மனிதநேயம், மதபண்பாடு, சமூக சமுதாய நல்லிணக்கம், சகோதரத்துவ அடிப்படையிலான படங்களில் நடிக்க வேண்டும் அது தான் வெகுஜன மக்கள் மட்டுமல்லாமல் அனைவரிடமும் சிறந்த கருத்தை கொண்டு செல்லமுடியும் என கேட்டுக்கொள்ளபட்டது

இந்நிகழ்வில் மண்டல செயலாளர் நீடூர் முஹம்மது நபீஸ், மண்டல பொருளாளர் பொதக்குடி சதகத்துல்லா, மண்டால துணைச் செயலாளர் நெல்லை ஜமால் அலி, IKP மண்டல செயலாளர் நீடூர் ஹாலிக், மக்கள் தொடர்பு செயலாளர் வேலம்புதுகுடி சர்புதீன், மருத்துவ அணி செயலாளர் நாகை இப்ராஹிம், மண்டல செயற்குழு உறுப்பினர் நீடூர் மிஸ்பாஹுதீன் மற்றும் மேலப்பாளையம் தாஸ்தகீர் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Top