
மதுரை கருப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கலீல் ரஹ்மான் என்பவர் சென்னை மேடவாக்கத்தில் நண்பர்களோடு தங்கி பணியாற்றிவந்தார்.
இந்நிலையில் நேற்று காலை விமான நிலைய சவாரிக்காக காத்திருந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
உடனடியாக மரணம் அடைந்தவரின் உறவினர்கள் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) மாநில துணைச்செயலாளர் மாத்தூர் இப்ராஹீம் அவர்களை தொடர்பு கொண்டு உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்த MJTS நிர்வாகிகள் உடலைப்பெற்று ஆம்புலன்ஸ் மூலம் MJTS மாநில துணைச்செயலாளர் மாத்தூர் இப்ராஹீம், சாஹுல் ஆகியோர் மரணமடைந்தவரின் சொந்த ஊரான மதுரை கருப்பட்டிக்கு உடலைக் கொண்டு சென்றனர் அங்கு MJTS மாநில பொருளாளர் கனி அவர்களுடன் இணைந்து அவரது குடும்பத்தினரிடம் உடலை ஒப்படைத்தனர்.
முன்னதாக மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) சார்பாக இறந்தவர் குடும்பத்தின் அவசர தேவைக்காக ரூபாய் 50,000 வசூல் செய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.