
விழுப்புரம் வடக்கு மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடி ஏற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பஜார் பகுதிகளில் மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி கொடி ஏற்றி வைத்து ஏழைகளுக்கு உணவு வழங்கினார்.
முன்னதாக மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதியதாக 10 கிளைகளை உருவாக்குவது குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இம்மாவட்டத்தில் பலர் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ள நிலையில் அவர்களை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேலிட பொறுப்பாளரும், மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாணவர் இந்தியா மண்டல செயலாளர் வழக்கறிஞர் முஸ்ரப், மாவட்ட செயலாளர் முஹம்மது ரிஸ்வான், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் K.பாஷா, மாவட்ட பொருளாளர் ஜெய்னுல் ஆபீதீன், மாவட்ட துணை செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, சையது உசேன், நகர செயலாளர் கரீம் பாட்சா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.