You are here

ஃபர்ஹான திரையிடல்…

இன்று ஃபர்ஹானா திரைப்படத்தின் பிரத்யேக காட்சி அப்படக்குழு சார்பில் திரையிடப்பட்டது.

முன்னதாக இதன் இயக்குனர் நெல்சன் அவர்கள் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு இத்திரைப்படம் குறித்து எடுத்துரைத்தார்.

சிறப்பு காட்சிக்கு வருமாறும், பலருக்கும் அழைப்பு தருமாறும் கேட்டுக் கொண்டார்.

அவர் தொடர் நிகழ்ச்சிகளில் இருப்பதால், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில துணை செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர்.

மவ்லவி மன்சூர் காஸிஃபி, மவ்லவி தர்வேஸ் ரஷாதி, SDPI மாநில செயலாளர் அ.ச. உமர் பாரூக், சமரசம் ஆசிரியர் அமீன், IFT நிர்வாகி சிக்கந்தர், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ஷேக், சமூக செயல்பாட்டாளர் கௌஸ், மற்றும் INLP, IMMK நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், படைப்பாளிகளும் பங்கேற்றனர்.

ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதுமில்லை என பலரும் கருத்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Top