You are here

புதுச்சேரி மாநிலத்தில்… கூட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம்..!

புதுச்சேரி மாநிலம் பாண்டிச்சேரியில் 47 ஜமாத்துகள் ஒருங்கிணைந்து ஐக்கிய ஜமாஅத் உருவாக்கும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

கல்வி வளர்ச்சி, சமூக மேம்பாடு, சமூக நல்லிணக்கம், பொது ஒருங்கிணைப்பு ஆகியவை இதன் நோக்கங்களாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் பிரதிநிதிகளும், கல்வியாளர்களும், ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று தனது ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்பிறகு அங்கு பல பிரமுகர்களும் அவரை சந்தித்து மஜக-வின் பணிகளுக்கு வாழ்த்து கூறியதுடன் அவரின் கடந்த கால சட்டமன்ற பணிகளை பாராட்டி நினைவு கூர்ந்தனர்.

நிதானமும், நல்லிணக்கமும் மிக்க மஜக-வின் அனுகு முறை தான் தற்போதைய சூழலுக்கு ஏற்றது என்று கருத்து கூறினர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நெய்வேலி இப்ராஹிம், மாணவர் இந்தியா கடலூர் மண்டல செயலாளர் முஸ்ரப் ஆகியோர் உடனிருந்தனர்.

Top