
கடலூரில் மஜக நகர துணைச் செயலாளர் H.உமர் பாரூக் அவர்களின் ‘A to Z சென்னை மொபைல்ஸ்- சேல்ஸ் & சர்வீஸ்’ கடையை மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இதில் மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், திமுக பிரமுகர் கடலூர் புகழேந்தி Ex. MLA., துணை மேயர் தாமரை செல்வன், மஜக இளைஞர் அணி செயலாளர் A.H.M ஹமீது ஜெகபர், மஜக மாவட்ட செயலாளர் கடலூர் மன்சூர், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் T.கண்ணன், அருள் பிரபு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் N.K.ரவி, குரு.ராமலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திறப்பு விழாவிற்கு பிறகு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
“மிக முக்கியமான மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை சந்திக்கிறோம்.
நாடே எதிர்பார்த்த கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் வந்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில், கன்னட மக்கள் நல்லிணக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். சமூக நீதியை ஆதரித்துள்ளனர்.
ஹிஜாப் பிரச்சனை, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு ரத்து என்பது போன்ற மதவாத சர்ச்சைகளை அவர்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், காங்கிரஸ் கட்சி திறந்த மனதோடு அனைவரையும் அணுக வேண்டும்.
அதாவது மாநில கட்சிகளுக்கு அவர்களின் தகுதிகளை மதித்து அரவணைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் இதை எதிர்பார்க்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பாண்மை பலத்தை கொடுத்த கர்நாடக மக்களுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில், கடலூர் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் OAK நூர் முகம்மது, மாணவர் இந்தியா கடலூர் மண்டல செயலாளர் லால்பேட்டை முசரப், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் நெய்வேலி மன்சூர், நகர நிர்வாகிகள் S.ஹாரூன்ரசீது, அசாருதீன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.