டிஜிட்டல் XRAY மையம்… UGA SEWA மருத்துவமனையில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார் !

ஜூலை.16,

குமரி மாவட்ட சகோதரர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் குடும்பத்துடன் பணி புரிகிறார்கள்.

அவர்கள் ஒன்று சேர்ந்து 25 வருடங்களாக UGA SEWA என்ற அமைப்பை உருவாக்கி, கல்வி, மருத்துவ சேவைகளை ஆற்றி வருகிறார்கள்.

அவர்கள் நாகர்கோவில் – கோட்டாறு பகுதியில் நவீன கருவிகளுடன் கூடிய மருத்துவமனையை 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள்.

நேற்று அதில் டிஜிட்டல் எக்ஸ் ரே மையத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்
செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திறந்து வைத்து அவர்களது சேவைகளை பாராட்டி பேசினார்.

அதன் தலைவர் வாஹித் அவர்களையும், அவரோடு பணியாற்றும் நிர்வாகிகளையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையும் வாழ்த்தினார்.

மேலும் எதிர்காலத்தில் TNPSC மற்றும் NEET ஆகியவற்றுக்கான இலவச பயிற்சி மையத்தையும், ஒரு பெண்கள் கலை அறிவியல் கல்லூரியையும் தொடங்க நீங்கள் திட்டமிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்வில் UGA SEWA அமைப்பின் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குநர் சாதிக் சாகுல், துணை நிர்வாக இயக்குநர் அப்துல் காதர், நிர்வாக செயலாளர் முகம்மது காஸிம், பொருளாளர் ஹிதாயதுன் நயீம், அறக்கட்டளை முகம்மது ரயீலுதீன், பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது, இணை ஒருங்கிணைப்பாளர் முகம்மது கபூர் மற்றும் UGA Sewa நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், கோட்டை ஹாரிஸ், பேராவூரணி சலாம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் பிஜ்ருல் ஹபிஸ், மாவட்ட பொருளாளர் சாதிக் அலி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நிர்வாகிகளும் உடன் பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மஜக_குமரி_மாவட்டம்
16.07.22