திருவிதாங்கோடு ஜும்மா நிகழ்வு… அறிவு சார்ந்து இளைஞர்களை உருவாக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி உரை!

ஜூலை;15,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்துள்ளார்.

இன்று திருவிதாங்கோட்டில் சின்னப்பள்ளிவாசலில் ஜூம்மா நிகழ்வுக்கு பின் ‘இளைஞர்களின் பொறுப்புகள் ‘ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய உரையின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு….

எந்த ஒரு சமூகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஒழுங்குப் படுத்தப்படுகிறார்களோ அந்த சமூகத்திற்கு சிறந்த எதிர்காலம் உண்டு.

பிரச்சனைகளை பதட்டமின்றி, நிதானமாக அணுக அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

வலைதளங்கள் மூலம் நிமிடத்திற்கு நிமிடம் Breaking news கிடைக்கிறது.

இச்சூழலில் வலைதளங்களை பொறுப்புணர்வோடு கையாள வேண்டும்.

அதில் பதிவுகளை இடும் போது கவனம் தேவை.

உணர்ச்சிகளை தூண்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .நிதானத்தை இழக்ககூடாது.

நடுநிலையாளர்களை எதிரிகளின் பக்கம் தள்ளி விட்டு விடக் கூடாது.

ஒரு மதவெறிக்கு மாற்று இன்னொரு மதவெறி அல்ல என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இனவெறியை தூண்டி மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லர் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பதிலுக்கு வன்முறையில் இறங்க வேண்டும் என எதிரிகள் விரும்புகிறார்கள். அதற்கு பலியாகி விடக் கூடாது.

பிரச்சனைகளை கண்டு உணர்ச்சிவசப்படாமல் பக்குவமாக எதிர்கொள்ள பழக வேண்டும்

அமைதி வழியிலேயே எதையும் சாதிக்க முன்வர வேண்டும்

எல்லா மக்களுடனும் இணைந்து தான் ஜனநாயக வழியில் மதவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்

இந்து, முஸ்லிம் , கிறித்துவர் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும்.

அதுதான் ஃபாஸிஸ்ட்டுகளை தனிமைப்படுத்தும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அறிவாளிகளை கொண்ட கூட்டத்திற்கு ஆயுதங்கள் தேவையில்லை என்றார் கவிஞர் அல்ல மா இக்பால்.

எனவே இளைஞர்களையும், மாணவர்களையும் உணர்ச்சி மயப்படுத்தாமல் அறிவு மயப்படுத்த வேண்டும்

அது தான் நீண்ட காலத்திற்கு பயனளிக்கும்

நாம், மாணவர்களை TNPSC தேர்வுக்கு தயார் படுத்த வேண்டும்

நிறைய IAS, IPS, IFS, அதிகாரிகளை உருவாக்க வேண்டும்

வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டும்

இதுதான் இன்றைய முக்கிய தேவைகளில் ஒன்றாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவரது உரையை தலைமை இமாம் வரவேற்று பாராட்டி பேசினார்.

தொடர்ந்து ஜமாத் அலுவலகத்தில் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு அளித்து, ஜமாத்தினர் சால்வை அணிவித்து சிறப்பித்தனர்

இந்நிகழ்வில் பொதுச்செயலாளருடன் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன், அவர்களும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஷாஹுல் ஹமீது, துணை தலைவர் ஜகபர், செயலாளர் அன்வர் ஹுசைன், துணை செயலாளர் மாலிக், பொருளாளர் பாசில், மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் அமீது , பேராவூரணி அப்துல் சலாம், கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் பிஜ்ருள் ஹபீஸ் , மாவட்ட பொருளாளர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரகுமான், அமீர்கான் , மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கன்னியாகுமரி_மாவட்டம்
15.07.2022