மார்ச்.08.,
மஜக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் ஹமீது ஜெகபர் அவர்களின் சுல்தான் எம்பயர் கடையை பரங்கிப்பேட்டையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி திறந்து வைத்தார்.
கைலிகளை வாங்கி முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்
கைலிகள், வேட்டிகள், தொப்பிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட இந்தோனேஷிய கைலிகளும், தொப்பிகளும் இங்கு கிடைக்கிறது.
இதில் JAQH அமைப்பின் மாநில தலைவர் அப்துல்காதர் மதனி, மாணவர் இந்தியாவின் மாநிலச் செயலாளர் வக்கீல் . முஷ்ரப், மஜக மாவட்டச் செயலாளர் லால்பேட்டை ஜாகீர், அவைத் தலைவர் தைய்யூப் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்
08.03.2024.