
சென்னை.ஜன.30., தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட தமிழகம் முழுவதும் மஜகவினர் விருப்பமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மத்திய சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வார்டுகளில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கட்சியின் துணை பொதுச்செயலாளரும், தேர்தல் ஒழுங்கு பணிக்குழு தலைவருமான என்.ஏ.தைமிய்யா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.எம்.சாகுல் அமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மாவட்ட துணைச்செயலாளர் ஜே.பக்கீர் மைதீன், இளைஞரணி செயலாளர் முகமது யாசின் மற்றும் மெர்லின் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_மேற்கு_மாவட்டம்
30.01.2022