![](https://mjkparty.com/wp-content/uploads/2022/02/ei79ZFY18291.jpg)
தூத்துக்குடி.ஜன.30., தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட தமிழகம் முழுவதும் மஜகவினர் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக 29-01-2022 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.
தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகம்மது நஜிப் அவர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் மீராசாஹிப் காயல்பட்டினம் நகர செயலாளர் இப்னுமாஜா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்
தகவல்.,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
30.01.2022