மஜக இல்ல மண விழா கோவையில் மாநிலச்செயலாளர் ஜாபர் மகள் திருமண நிகழ்ச்சி மஜக தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்பு…

மே.02.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் கோவை M.H. ஜாபர் அவர்களுடைய மகள் முஃப்லிஹா அவர்களுக்கும் ,மணமகன் அனஸ் முகம்மது அவர்களுக்கும் இன்று கோவையில் திருமணம் என்னும் நிக்காஹ்.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, இணைப் பொதுச்செயலாளர் சையது முகம்மது பாரூக் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இதில் கோவை கூட்டமைப்பு தலைவர் இதயத்துல்லா ஹாஜியார், சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு செயலாளர் பைசல், திமுக பிரமுகர்கள் தனிக்கை ராஜேந்திரன், கோட்டை அப்பாஸ், S.A.காதர், கோட்டை பதுருதீன், நீண்டகால ஆயுள் சிறைவாசி அன்சாரி உள்ளிட்டோர்களும், கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், மார்க்க அறிஞர்கள் பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகள் என்று பலரும் வருகை தந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, நாகை முபாரக், கலைக்குயில் இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பேரா. அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் உள்ளிட்ட மஜக-வின் மாநில, மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்கள் திரளாக பங்கேற்றனர்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_தெற்கு_மாவட்டம்
02.05.2024.